டொனால்டு டிரம்ப் மகள் நாளை இந்தியா வருகை: தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்...!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.
டொனால்டு டிரம்ப் மகள் நாளை இந்தியா வருகை: தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்...!
Published on

லக்னோ,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவரது இளைய மகள் டிப்னி டிரம்ப். இவர் டொனால்டு டிரம்ப்பின் 2வது மனைவியின் மகள் ஆவார்.

டிப்னி டிரம்ப்

இந்நிலையில், டிப்னி டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். டெல்லி வரும் டிப்னி டிரம்ப் அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு செல்கிறார்.

அவர் நாளை மறுதினம் காலை ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். தாஜ்மஹாலை பார்வையிட்டப்பின் டிப்னி டிரம்ப் விமானம் மூலம் ராஜஸ்தான் செல்கிறார். டிப்னி டிரம்ப் வருகையையொட்டி தாஜ்மஹாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com