

திருவனந்தபுரம்,
கடந்த 2022-ம் ஆண்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தில், இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பத்மா ஆகிய இருவரையும், எலந்தூரில் உள்ள தம்பதி இருவரும் பூஜை என்ற பெயரில், நரபலி கொடுத்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தில், நரபலி கொடுத்த பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 3-வது குற்றவாளியான லைலா, ஜாமின் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, லைலாவிற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.