இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்து உள்ளது.
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கடந்த 8ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்து உள்ளது. சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com