போக்குவரத்து விதிகளை மீறும் போலீசாருக்கு இரட்டிப்பு அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறும் போலீசாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் போலீசாருக்கு இரட்டிப்பு அபராதம்
Published on

லக்னோ,

மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி புதிய சட்டத்திருத்தம் கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம் மற்றும் தண்டனைகளை விட பல மடங்கு அதிகமாக அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி ஓ.பி.சிங் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் போலீசார் அலுவலகப்பணியின் போதோ அல்லது சொந்த வேலையின் போதோ வாகனங்களை பயன்படுத்தும்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் புதிய சட்டத்திருத்தத்தின்படி அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com