

இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ். அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, 100 மைக்ரான் அளவுக்கும், குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து கருத்துகளை அறியும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டபிறகு, இறுதி முடிவு எடுத்து உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்து, வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.