பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்... முகலாயர்கள் பற்றிய வரலாறு நீக்கம்... மத்திய அரசின் திடீர் முடிவு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்... முகலாயர்கள் பற்றிய வரலாறு நீக்கம்... மத்திய அரசின் திடீர் முடிவு
Published on

புதுடெல்லி,

என்.சி.இ.ஆர்.டியின் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உபி அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை பின்பற்றும் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கும் பொருந்தும்.

காங்கிரஸ் சார்பு எழுந்தாளர்கள் வரலாற்றை திரித்து கூறியப்பதாகவும், அதனை மாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் பாஜக தலைவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com