போர்ச்சுக்கல் சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பிய திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு

போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா பயணங்களை முடித்து கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று நாடு திரும்பினார்.
போர்ச்சுக்கல் சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பிய திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பாவுக்கு சென்ற நிலையில், தனி விமானம் மூலமாக முதலில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றடைந்தார் .

இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு சென்றது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். தலைநகர் லிஸ்பனில் அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ முதலிய உயர்மட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .

தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக ஜனாதிபதி முர்மு சுலோவாகியாவுக்கு சென்றார் . இந்த பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின .

இந்த நிலையில் போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா பயணங்களை முடித்து கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று நாடு திரும்பினார் அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com