

பலசோர்,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய டாங்கி தகர்ப்பு ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது குறைந்த எடை கொண்டது.
இந்த ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை, நேற்று ஒடிசா மாநிலம் பலசோர் கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது. நடமாடும் லாஞ்சரில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. திட்டத்தின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறியதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.டி.ஓ.வுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.