'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

டார்பிடோ என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி
Published on

புவனேஸ்வர்,

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பாதுகாப்பு படையில் சேர்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டதாகவும், இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com