கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: திரிஷ்யம் பட பாணியில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி


கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: திரிஷ்யம் பட பாணியில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி
x

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மனுவை வீட்டிற்கு அழைத்து கோமல் சவான் உல்லாசமாக இருந்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா பகுதியை சேர்ந்தவர் விஜய் சவான் வயது 35 இவரது மனைவி கோமல் சவான் வயது 28 இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமல்சவானுக்கும் அவரது பக்கத்துவீட்டை சேர்ந்த மனு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் கணவர் இல்லாத நேரம் பார்த்து இருவரும் ஒன்றாக வெளியில் ஊர் சுற்றியுள்ளனர். தனியாக பல நேரங்களில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மனு கோமல் சவானை சந்திக்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வருவதை பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விஜய் சவானிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்சவான் அவரது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலில் விடாப்பிடியாக இருந்த கோமல் சவான் மனுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மனுவை வீட்டிற்கு அழைத்து கோமல் சவான் உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவன் விஜய் சவானை கொல்ல மனுவுடன் சேர்ந்து கோமல்சவான் திட்டம் தீட்டினார்.

விஜய் வீட்டில் இருந்தபோது அங்கு வத மனு பின்பக்கமாக நின்று அவரை சரமாரியாக தாக்கினார். மனுவுடன் சேர்ந்து அவரது மனைவி கோமல் சவானும் தாக்கினார். இந்த தாக்குதலில் நிலை குலைந்த விஜய் சவான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பிறகு இருவரும் சேர்ந்து விஜய்சவானின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். பிணத்தை வெளியில் எடுத்து சென்றால் மாட்டுக்கொள்வோம் என பயந்த அவர்கள் யாருக்கும் தெரியாமல் விஜய்சவானின் உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்தனர். அந்த இடத்தில் புதிய டைல்ஸ்களை பதித்தனர்.

இந்தநிலையில் விஜய் சவானை தேடி அவ்வபோது அவரது நண்பர்களும் உறவினர்களும் வீட்டிற்கு வந்தனர். கோமல் சவான் ஏதோதோ காரணங்களை கூறி சமாளித்து வந்தார். சந்தேகமடைந்த அவரது சகோதரர்கள் கோமலிடம் விசாரித்தனர். வெளியில் போனவர் வீட்டிற்கு திரும்பவில்லை என அவர் கூறினார்.

அவர் கூறியதை நம்பாமல் விஜய்யின் சகோதரர்கள் வீட்ரை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் டைல்ஸ் புதிதாக பதிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். மேலும் அங்கு லேசான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அந்த இடத்தை தோண்டினர். அங்கு விஜய் உடல் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கோமலையும், மனுவையும் தேடி வருகின்றனர். மலையாளப்படமான திரிஷ்யம் படத்தில் வருவதுபோல் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story