ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்படும் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்படும் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
Published on

புதுடில்லி,

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கும் திட்டம் விரைவில் கெண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசும்போது, ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் ஒரு வரையறை இல்லாமல் இருப்பதால் சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கெண்டிருக்கிறது. இனி ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கெண்டு வரப்படும். எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது.

ஆதாரைப் பெறுத்தவரையில் உங்களது பெயரை மாற்றிக் கெள்ளலாம். ஆனால், கைரேகை, பயே மெட்ரிக்ஸ் ஆகியவற்றை மாற்ற முடியாது. இதன் மூலம் இனி பேலியான ஓட்டுநர் உரிமம் யாரும் பெற முடியாது. இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்றார்.

மேலும் தெழில்நுட்பத்துறையை பெறுத்தவரையில் மின்னனு வர்த்தகத்தில் இந்தியா 51 சதவீதம் முன்னேறி உள்ளது. தற்பேது 123 கேடி மக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. 121 கேடி பேருக்கு செல்பேன் உள்ளது. அவைகளில் 44.6 கேடி ஸ்மார்ட்பேன்கள் ஆகும். 56 கேடி மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com