தனித்தனி நிறங்களில் டிரைவிங் லைசென்ஸ்: மத்திய அரசு திட்டம்- ஏன் தெரியுமா?

டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Image Credits :  Grok AI
Image Credits : Grok AI
Published on: 

புதுடெல்லி,

புதிதாக வழங்கப்படுவது அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு லைசென்சும், படிவம் 7-ல் உள்ள லேமினேட் செய்யப்பட்ட அல்லது பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.) அட்டையின் வடிவில் இருக்க வேண்டும்.

தனத்தனி நிறங்களில் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்தங்களை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. இதில் முக்கியமாக இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு என தனத்தனி நிறங்களில் லைசென்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வரைவு விதிகளில், 'புதிதாக வழங்கப்படுவது அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு லைசென்சும், படிவம் 7-ல் உள்ள லேமினேட் செய்யப்பட்ட அல்லது பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.) அட்டையின் வடிவில் இருக்க வேண்டும். அதில், இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் லைசென்சுகளுக்கும், வெளிநாட்டினருக்குமான லைசென்சுகளுக்கும் தனித்தனி படிவங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

ரத்த வகை, செல்போன் எண் ஆகியவை நிச்சயம் இடம்பெற வேண்டும்

மேலும் லைசென்சுகளில் ஓட்டுனர்களின் ரத்த வகை, செல்போன் எண், அவசர தொடர்பு எண் போன்றவை நிச்சயம் இடம்பெற வேண்டும் எனவும் வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயது, முகவரியில் முறைகேட்டை தடுக்க பிரமாண பத்திரங்கள் அல்லது ஆயுள் காப்பீட்டு பாலிசியை ஆதாரமாக ஏற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே உள்ள நோட்டரி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவையில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com