ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி

ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலியானார்.
ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் மின்வாரிய ஊழியராக இருந்து வந்தவர் மகேஷ்கவுடா (வயது 40). இவர், குப்பி அருகே திப்தூரில் ஏரிக்கு நடுவே இருந்த மின்கம்பத்தில் பழுதான மின்வயரை சரி செய்ய சென்றார். மழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

இதன் காரணமாக நீச்சல் அடித்தபடியே ஏரிக்குள் சென்று மின்வயரை சரி செய்துவிட்டு, மீண்டும் கரைக்கு திரும்பினார். ஆனால் மகேஷ்கவுடாவால் நீச்சல் அடிக்க முடியாமல் போனதால், ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். அவரை காப்பாற்ற கிராம மக்கள் முயற்சித்தும் முடியாமல் போனது. இதுகுறித்து திப்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com