

மும்பை,
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயாரும், பெண் தொழிலதிபருமான இந்திராணி முகர்ஜி நீதிமன்றக் காவலின்கீழ், தெற்கு மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரகால சிகிச்சை பிரிவில் அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமாக மருந்துகள் உட்கொண்டதால், அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உடல்நலம் தேறியதையடுத்து இந்திராணி முகர்ஜி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைச்சாலை அழைத்துச்செல்லப்பட்டார்.