பண்ணை வீட்டில் போதை விருந்து - 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்

சமூகவலைத்தளம் மூலமாக ஆட்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ணை வீட்டில் போதை விருந்து - 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 22 சிறுமிகள் உள்பட 65 பேர் போதையில் இசைக்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 2 பேர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சமூகவலைத்தளம் மூலமாக ஆட்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com