மணிப்பூரில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூரில் போலீஸ் ஏட்டு ஒருவரின் வீட்டிலேயே போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மணிப்பூரில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
Published on

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டம் எய்ரிக்போக் என்ற இடத்தில் போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வருவது தெரிய வந்தது. அந்த தொழிற்சாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட 400 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.90 கோடி ஆகும். போலீஸ் ஏட்டு ஒருவரின் வீட்டிலேயே அந்த தொழிற்சாலை இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த ஏட்டு உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com