பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்

பெங்களூருவில் ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சொக்கனஹள்ளி என்ற பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளூக்கு ரகசிய தகவல் கிடத்தது. அதன்பேரில், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ காஞ்சா, எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களை பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அதை பதுக்கியவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். இது, பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக, வைக்கப்பட்டிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com