மராட்டியத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டவர் உள்பட 3 பேர் கைது

போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மராட்டியத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டவர் உள்பட 3 பேர் கைது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, வாகனத்தில் இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் உள்பட 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர்.

அப்போது, 3 பேரையும் விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன், மெப்கிடிரொன் ஆகிய போதைப்பொருளை 3 பேரும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com