மராட்டியத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் : பெண் கைது

போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது எனவும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டியத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் : பெண் கைது
Published on

மும்பை

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு துலின்ஜ் பகுதியில் உள்ள ஏரி அருகே போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண் நடமாடுவதை கண்டறிந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் ரூ.13.5 லட்சம் (67.5 கிராம்) மதிப்புள்ள போதைபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த போதைப்பொருளை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இவர் உகாண்டாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடத்திய போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது எனவும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com