மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது


மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
x

ஹாங்காங்கில் இருந்து வந்திறங்கிய 2 பயணிகளிடம் 7.864 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு ஹாங்காங்கில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், ஹாங்காங்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் மும்பை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது 2 பயணிகளிடம் இருந்து 7.864 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு சுமார் 7.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் மற்றொரு சம்பவத்தில் பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய ஒரு பயணியிடம் இருந்து ரூ.11.9 கோடி மதிப்பிலான 11.922 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 சம்பவங்களில் மொத்தமாக 19.786 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.19 கோடி என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story