அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

512.58 கிராம் ஹெராயினும், 967.9 கிலோ கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திஸ்பூர்,

அசாம் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோக்ரஜார் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 512.58 கிராம் ஹெராயினும், 967.9 கிலோ கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com