

திருவனந்தபுரம்,
எத்தியோப்பியா நாட்டில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கென்யாவைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கென்யாவில் இருந்து வந்த கரன்சா மைக்கேல் என்ற நபரைப் பிடித்து கொச்சி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பின்னர் சந்தேகத்தின்பேரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவரது வயிற்றில் போதை மருந்து கேப்சியூல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த போதை மருந்துகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.6.68 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.