'ராகுல்காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது' - விடுதி பேராசிரியர் நோட்டீஸ்

டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு கடந்த 5-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீர் என சென்றார்.
'ராகுல்காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது' - விடுதி பேராசிரியர் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு கடந்த 5-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீர் என சென்றார். அவர் ஆண்கள் விடுதிக்கு சென்று சில மாணவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.

'ராகுல்காந்தி, அனுமதியற்ற பயணமாக வந்துள்ளார். அவர் உள்ளே நுழைந்தபோது, மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இத்தகைய பயணம், மாணவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். மாணவர்களுடன் உரையாட உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.' என்று கண்டன குரல் எழுந்தது.

இதற்காக பல்கலைக்கழக விடுதியின் பேராசிரியர் ஒருவர் ராகுல் காந்திக்கு நேற்று நோட்டீசு அனுப்பினார். ''தேசியக் கட்சித் தலைவர் ஒருவரின் இதுபோன்ற நடத்தை கண்ணியமற்றது. பல்கலைக்கழக விடுதியின் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறியதாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம்'' என்று அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com