ஏ.சி. எந்திரத்தில் கோளாறு: துபாய் புறப்பட்ட விமானம் திரும்பி வந்ததால் பரபரப்பு..!!

ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக துபாய் புறப்பட்ட விமானம் திரும்பி வந்ததால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று 178 பயணிகளுடன் நேற்று மதியம் 1.19 மணி அளவில் துபாய் புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்த போது, அதன் ஏ.சி. எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அந்த விமானம் மீண்டும் திருவனந்தபுரத்துக்கே திரும்பியது.

பின்னர் பிற்பகல் 3.52 மணி அளவில் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக இறங்கினர்.

விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு பின்னர் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

துபாய் புறப்பட்ட விமானம் ஏ.சி. எந்திர கோளாறு காரணமாக சில மணி நேரத்தில் திரும்பி வந்த சம்பவம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com