புழுதி புயலுடன் கனமழை: டெல்லியில் விமான மற்றும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

புதுடெல்லியில் புழுதி புயலுடன் கனமழை பெய்வதன் காரணமாக விமான மற்றும் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
புழுதி புயலுடன் கனமழை: டெல்லியில் விமான மற்றும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்து உள்ளது. புழுதி புயலுடன் மழை பெய்ததன் காரணமாக விமான மற்றும் மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. ஸ்ரீநகர்-டெல்லி இடையிலான தனியார் விமானம் அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு நேரிட்டு உள்ளது. வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஹிமாலயா மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இப்போது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழுதி புயலுடன் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com