மராட்டிய துறைமுகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல்

2026-2027-ம் நிதியாண்டில் இதுவரை ரூ.135 கோடி மதிப்பிலான 3.55 லட்சம் மின்னணு சிகரெட்டுகள், வருவாய் புலனாய்வுத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மராட்டிய துறைமுகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல்
இ-சிகரெட்டுகள் பறிமுதல்
Published on: 

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், ரூ.4 கோடி மதிப்புள்ள 13 ஆயிரம் இ-சிகரெட்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:-

தீவிர சோதனை

மராட்டிய மாநிலம், நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு சரக்கு பெட்டகங்களில் சில பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், துறைமுகத்தில் உள்ள சரக்குகளை கையாளும் பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

13 ஆயிரம் இ-சிகரெட்டுகள்

துறைமுகத்திலிருந்த சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அதில், அட்டை பெட்டிகளுக்குள் 13 ஆயிரம் இ-சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த 13 ஆயிரம் மின்னணு சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ-சிகரெட்டுகள் தடை

இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகளை தயாரிப்பது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது, விற்பனை, விநியோகம் செய்வது மற்றும் சேமித்து வைப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரூ.135 கோடி சரக்குகள் பறிமுதல்

2026-2027-ம் நிதியாண்டில் இதுவரை ரூ.135 கோடி மதிப்பிலான 3.55 லட்சம் இ-சிகரெட்டுகள், வருவாய் புலனாய்வுத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மராட்டியம், குஜராத், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் இவை பறிமுதல் செய்யப்பட்டன. எல்லை தாண்டிய கடத்தலை தடுக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X