

புதுடெல்லி,
விமானப் பயண ஆவணம் (போர்டிங் பாஸ்) என்பது விமான நிறுவனத்தால் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒரு அனுமதி ஆவணமாகும். பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதியை வழங்கி பயணம் செய்ய, ஒவ்வொரு பயணியும் இந்த ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.
குடிவரவு அதிகாரிகளால் இந்த ஆவணத்தை சரிபார்க்கும்போது அதில் முத்திரை குத்தப்படும் நிலை இருந்தது. இதனால் முக்கியமான தகவல்கள் மறைந்து போவது, ஆவணம் சேதம் அடைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனால் இந்திய விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் போர்டிங் பாஸ்முறை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள இணையவழி போர்டிங் பாசை காண்பித்து குடிவரவு சோதனையை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.