

டெல்லி,
இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுகினோ. இவர் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த சுகினோ மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.
இதையடுத்து, 8வது இந்தியா - இந்தோனேசியா இணை ஆணைய கூட்டத்தில் சுகினோவும், ஜெய்சங்கரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியா, இந்தோனேசியா இடையேயான உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.