விடிய விடிய நிர்வாண விருந்து, மதுபானம்... சமூக ஊடகத்தில் அழைப்பு; அடுத்து நடந்த அதிரடி


விடிய விடிய நிர்வாண விருந்து, மதுபானம்... சமூக ஊடகத்தில் அழைப்பு; அடுத்து நடந்த அதிரடி
x

விருந்து நிகழ்ச்சி மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு முழுவதும் பண்ணை இல்லம் அல்லது பப் அல்லது நீச்சல் குளத்தில் நடைபெறும்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் தலைநகர் ராய்ப்பூர் நகரில் படகாவன் பகுதியில் வி.ஐ.பி. சாலையில் பண்ணை இல்லம் ஒன்று உள்ளது. அதில், அபாரிசித் கிளப்பில் வருகிற 21-ந்தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் விசயம் என்னவென்றால், விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களுடன் மதுபானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஸ்ட்ரேஞ்சர் ஹவுஸ் பார்ட்டி எனப்படும் நிர்வாண விருந்து நிகழ்ச்சி பற்றி சமூக ஊடகத்தில் போஸ்டர் ஒன்றும் வைரலானது.

இந்த நிகழ்ச்சி மாலை 4 மணியளவில் தொடங்கும். இரவு முழுவதும் பண்ணை இல்லம் அல்லது பப் அல்லது நீச்சல் குளத்தில் விருந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. நிலைமையின் தீவிரம் பற்றி உணர்ந்த மூத்த காவல் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள், பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் புரோமோட்டர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தெலிபந்த காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

இதற்காக ஆளும் பா.ஜ.க.வை சாடிய காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், சத்தீஷ்காரின் கலாசாரம் அழிக்கப்படுகிறது. அதற்கான சதி திட்டம் தீட்டப்படுகிறது என குற்றச்சாட்டாக கூறினார். பா.ஜ.க. சுகாதார மந்திரி ஷியாம் பிகாரி ஜெய்ஸ்வால் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story