விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்

விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
விஜயாப்புராவில் மீண்டும் நிலநடுக்கம்
Published on

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. கர்நாடகத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 2 முறை விஜயாப்புரா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயாப்புரா மாவட்டத்தில் திக்கோடா தாலுகாவில் ஹுபனூர், தக்கலகி, காக்கவாடகி, கோனசகி, ஜலகெரி, சோமதேவரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளில் ஏற்பட்ட அதிர்வால், மக்கள் பயந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் கூறினர். நிலநடுக்கம் குறித்து மாநில பேரிடம் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், அதன் தீவிரம் குறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com