14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம்

14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 14 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7.24 மணிக்கு கட்ச் மாவட்டம் ராபர் பகுதியில் லேசாக ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8.35 மணி அளவில் கட்ச் மாவட்டம் பாசு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியது. அதே மாவட்டத்தில் பிலா என்ற இடத்தில் காலை 9.7 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியது.

14 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 முறை நிகழ்ந்த இந்த லேசான நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com