

புதுடெல்லி,
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அருகே இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.33 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15.703 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.981 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.