அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு
Published on

சிம்லா,

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமெங் பகுதியில் இன்று காலை 11.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com