பீகாரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

பீகாரில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு
Published on

பாட்னா,

டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பீகாரிலும் ஏற்பட்டது. ஒரே நாளில் இந்தியாவில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.93 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 84.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com