அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் மதியம் 12.49 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
Published on

சண்டிகர்,

அரியானாவில் உள்ள சோனிபட் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.04 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.77 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. அரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com