இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு

இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
Published on

தர்மசாலா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சமீப நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. அசாமின் மோரிகாவன் நகரில் நேற்று காலை 6.13 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது.

இதேபோன்று நேற்று முன்தினம் அசாமின் தேஜ்பூர் நகர் அருகே காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com