ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
Published on: 

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) அதிகாலை 2:38 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.543 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.407 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

X