லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ரிக்டர் ஆக பதிவு

லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ரிக்டர் ஆக பதிவு
Published on

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் அருகே அமைந்துள்ள லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வு உணரப்பட்டவுடன், வீடுகளில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வால் கட்டிடங்கள் லேசாகக் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனினும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com