லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் 3.7 அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

லே லடாக் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.52 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.722 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.463 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்தவித தகவலும் உடனடியாக வெளியாக வில்லை.

முன்னதாக, லே லடாக் பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு 8.18 மணியளவில் ரிக்டர் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com