

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் காஷ்மீரின் பகுதியில் இன்று 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) அதிகாலை 2:38 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) காலை 8.48 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் இன்று 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (இந்திய நேரப்படி) காலை 9.15 மணிக்கு 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.