மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட மித அளவிலான நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு
Published on

சந்தல்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சீனாவின் ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஜிசாங் நகரில் நேற்று மாலை 4.29 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com