மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

மணிப்பூரின் நோனி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.18 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனையடுத்து, மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவார் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 4.30 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும், அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.41 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com