மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் மாலை 5.36 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
Published on

இம்பால்,

மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.36 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

83 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.684 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.386 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com