

ஷில்லாங்,
மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப்பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.609 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.765 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.