

புதுடெல்லி,
பஞ்சாப் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.