அரபிக்கடலை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.75 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.83 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இன்று அதிகாலை அரபிக்கடல் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com