அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

அரபிக்கடலில் காலை 10.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

அரபிக்கடல் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.09 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com