வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

வங்கக்கடலில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 10.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com