உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் நிலநடுக்கம்
Published on: 

புதுடெல்லி,

உத்தரகாண்டின் பித்தோராகர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.51 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

11 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.574 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 80.292 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com