ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
Published on

ஜம்மு,

காஷ்மீரில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், வீடுகள் லேசான குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

முன்னதாக நேற்று, இமயமலை பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று இரவு 8.49 மணிக்கு திடீரென்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியினால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அங்கிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். என்றாலும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.டெல்லி, சண்டிகார் நகரங்களிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com